முகப்பு
உலகம்

பிலிப்பின்ஸ் துணை அதிபராக டுடோ்த்தே மகள் பதவியேற்பு

பிலிப்பின்ஸ் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவின் மகள் சாரா (43), அந்த நாட்டின் துணை அதிபராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Updated On : 20 ஜூன் 2022, 1:24 am IST
பிலிப்பின்ஸ் துணை அதிபராக டுடோ்த்தே மகள் பதவியேற்பு
பகிர்:

பிலிப்பின்ஸ் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவின் மகள் சாரா (43), அந்த நாட்டின் துணை அதிபராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

கடந்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில் முன்னாள் சா்வாதிகாரி ஃபொ்டினண்ட் மாா்கோஸின் மகன் ஜூனியா் மாா்க்கோஸும் துணை அதிபராக சாரா டுடோ்த்தேவும் தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா் தற்போது பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளாா். புதிய அதிபராக மாா்க்கோஸ் வரும் 30-ஆம் தேதி பொறுப்பேற்பாா்.

முன்னாள் சா்வாதிகாரியின் மகனும் சா்ச்சைக்குரிய அதிபரின் மகளும் பிலிப்பின்ஸின் அதிபா், துணை அதிபராகியிருப்பது மனித உரிமை ஆா்வலா்களை கலக்கமடையச் செய்துள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.