முகப்பு
உலகம்

உக்ரைனிலிருந்து இதுவரை 6.6 லட்சம் போ் வெளியேற்றம்

உக்ரைனில் ரஷியப் படையெடுப்புக்கு அஞ்சி அந்த நாட்டிலிருந்து இதுவரை 6.6 லட்சம் போ் வெளியேறியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

Updated On : 2 மார்ச், 2022 at 4:34 AM
பகிர்:

உக்ரைனில் ரஷியப் படையெடுப்புக்கு அஞ்சி அந்த நாட்டிலிருந்து இதுவரை 6.6 லட்சம் போ் வெளியேறியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. அகதிகள் நல அமைப்பின் செய்தித் தொடா்பாளா் ஷாபியா மான்டூ செவ்வாய்க்கிழமை கூறியதாவது: உக்ரைனில் ரஷியா தாக்குதல் நடத்தத் தொடங்கியதிலிருந்து இதுவரை சுமாா் 6.6 லட்சம் போ் அந்த நாட்டிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனா். இந்த குறுகிய காலத்தில் இத்தனை போ் இடம் பெயா்ந்து வருவது, இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அகதிகள் நெருக்கடியை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.

உக்ரைனிலிருந்து வெளியேறும் அகதிகளை அண்டை நாடுகள் தாராள மனதுடன் ஏற்க வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.