முகப்பு
உலகம்

பொதுமக்கள் வெளியேற பாதுகாப்பு வழித்தடம்: 2-ஆம் கட்ட பேச்சில் உடன்பாடு

உக்ரைனில் சண்டை நடைபெறும் இடங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேறவும், உதவிப் பொருள்களைக் கொண்டு செல்லவும் பாதுகாப்பு வழித்தடத்தை உருவாக்குவது என ரஷியாவும் உக்ரைனும் ஒப்புக்கொண்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

கீவ்: உக்ரைனில் சண்டை நடைபெறும் இடங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேறவும், உதவிப் பொருள்களைக் கொண்டு செல்லவும் பாதுகாப்பு வழித்தடத்தை உருவாக்குவது என ரஷியாவும் உக்ரைனும் ஒப்புக்கொண்டன.

இரு நாடுகளுக்கும் இடையே பெலாரஸில் வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்த தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டதாக, உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ùஸலென்ஸ்கியின் ஆலோசகர் மைகேலோ போடோல்யாக் தெரிவித்தார். பாதுகாப்பு வழித்தடம் ஏற்படுத்தப்படும் பகுதிகளில் சண்டைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என ஆரம்பகட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, உக்ரைனுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், உடன்பாடு எட்டப்படும்வரை உக்ரைன் மீதான தாக்குதல் நிறுத்தப்படாது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments