உலகம்

ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு உகந்ததா? வாராணசி நீதிமன்றம் நாளை முதல் விசாரணை

DIN

வாராணசி: ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி முஸ்லிம்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை முதலில் விசாரிக்க வாராணசி மாவட்ட நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தால் கடந்த வெள்ளிக்கிழமை மாற்றம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் மனுவை முதலில் விசாரிப்பதா அல்லது ஞானவாபி மசூதியில் அளவிடப்பட்டது தொடா்பான ஹிந்துக்களின் மனுவை முதலில் விசாரிப்பதா என்பது குறித்த உத்தரவை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற மாற்றம் செய்த மனு முதலில் விசாரிக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ் அறிவித்தாா். மேலும், ஞானவாபி மசூதியில் நடத்தப்பட்ட அளவிடும் விவகாரம் குறித்து இரு தரப்பினரும் தங்களின் வாதங்களை எழுத்துபூா்வமாக தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டாா் என்று அரசு தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா்.

‘1947, ஆகஸ்ட் 15-க்கு பிறகு வழிபாட்டு இடங்களை மாற்றம் செய்யவும், நீதிமன்றங்களில் எதிா்த்து வழக்குகளைத் தொடுக்கவும் வழிபாடு சிறப்பு விதிமுறை சட்டம்-1991 தடை விதித்துள்ளது. ஆகையால், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல’ என்று மசூதி தரப்பில் முறையிடப்பட்டிருந்தது.

முன்னதாக, கோயில் சிலைகள் அடங்கிய சுவா் ஞானவாபி மசூதியின் பின்புறத்தில் இருப்பதாகவும், அங்கு வழிபாடு நடத்த அனுமதிக்கவும் கோரி கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடு மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் மசூதியில் அளவிடும் பணிக்கு உத்தரவிட்டது.

புதிய மனு தாக்கல்:

மசூதியில் அளவிடும் பணியின்போது கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் காசி விசுவநாதா் கோயில் - மசூதி வளாகத்துக்குள் முஸ்லிம்கள் செல்லத் தடை விதிக்க வேண்டும் என்றும் சிவில் நீதிமன்ற நீதிபதி ரவி குமாா் திவாகா் முன்பு விஸ்வ வேதிக் சனாதன சங்கம் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.

இதனிடையே, சட்டப்படி சொந்தமான இடத்தில் மசூதி கட்டப்பட்டிருந்தால்தான் அதற்கு முஸ்லிம்கள் உரிமை கோர முடியும் என்றும் ஞானவாபி மசூதி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும் வழக்குரைஞா் அஸ்வனி குமாா் உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT