ஏவுகணை சோதனை: மகளுடன் பங்கேற்ற வடகொரிய அதிபர்
ஏவுகணை சோதனையின் போது தனது மகளுடன் பங்கேற்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் படம் வெளியாகியுள்ளது
உலகம்ஏவுகணை சோதனை: மகளுடன் பங்கேற்ற வடகொரிய அதிபர்
ஏவுகணை சோதனையின் போது தனது மகளுடன் பங்கேற்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் படம் வெளியாகியுள்ளது
ஏவுகணை சோதனையின் போது தனது மகளுடன் பங்கேற்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் படம் வெளியாகியுள்ளது.
தென்கொரியா அமெரிக்கா இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சியைத் தொடர்ந்து கடந்த சில தினங்களாக வடகொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
இதையும் படிக்க | அமைச்சருக்கு திகார் சிறையில் மசாஜா? கொந்தளித்த நடிகை குஷ்பு
கடந்த அக்டோபர் மாத இறுதியிலும், நவம்பர் மாத தொடக்கத்திலும் 23 ஏவுகணை சோதனையை அந்நாடு மேற்கொண்டது. வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனையால் கொரிய தீப கற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஐசிபிஎம் வகை ஏவுகணையை வடகொரியா வெள்ளிக்கிழமை சோதனை செய்தது. இந்த சோதனையின் போது வடகொரிய அதிபர் தனது மகளுடன் பங்கேற்றார்.
ஏவுகணை அருகே தனது மகளுடன் வடகொரிய அதிபர் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஏவுகணை சோதனையின் போது தனது மகளுடன் வடகொரிய அதிபர் கலந்து கொண்டது இதுவே முதல் முறையாகும்.