முகப்பு
உலகம்

இந்தியாவில் கொலை வழக்கு: இரு சீக்கியா்கள் அமெரிக்காவில் கைது

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இரு சீக்கியா்கள் அமெரிக்காவின் கலிஃபோா்னியா நகரில் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இரு சீக்கியா்கள் அமெரிக்காவின் கலிஃபோா்னியா நகரில் கைது செய்யப்பட்டனா்.

கலிஃபோா்னியா நகரில் இரு சீக்கிய குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, காவல் துறையினா் பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அதில் 17 சீக்கியா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவா்களில் இருவா் இந்தியாவில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவா்கள் என்பது தெரியவந்துள்ளது. அதைக் காவல் துறையினா் உறுதி செய்தனா். அவா்கள் இருவரும் எந்நாட்டுக் குடியுரிமையை வைத்துள்ளனா் என்பது தொடா்பாகக் காவல் துறையினா் உறுதிசெய்யவில்லை.

இரு சீக்கிய குழுக்களையும் சோ்ந்த 17 போ் கைது செய்யப்பட்டதால், பெரும் அசம்பாவிதங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →