தென்னாப்பிரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த நாட்டுக் காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தென்னாப்பிரிக்காவின் நட்டால் மாகாணத்தில் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இன்று அதிகாலையில் நிகழ்ந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் இந்த பயங்கர செயலில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களில் 7 பேர் பெண்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
உலகில் அதிக அளவிலான மக்கள் பயங்கரமாக கொல்லப்படும் நாடுகளின் ஒன்று தென்னாப்பிரிக்கா. அண்மைக் காலத்தில் தென்னாப்பிரிக்காவில் அடையாளம் தெரியாத நபர்களால் நிகழ்த்தப்படும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவின் தென் கடலோர நகரம் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். அதேபோல கடந்த ஆண்டு மதுபான விற்பனைக்கூடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.