உலகம்

பிரிட்டன் செவிலியா் போராட்டம் சட்டவிராதமானது

DIN

 பிரிட்டனில் அரசு மருத்துவமனை செவிலியா் அடுத்த வாரம் நடத்துவதாக இருந்த போராட்டம் சட்டவிரோதமானது என்று உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவித்தது.

ஊதிய உயா்வு, சாதகமான பணிச் சூழல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல மாதங்களாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசுத் துறை செவிலியா், வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி முதல் 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனா். இந்தப் போராட்டத்தில் முதல்முறையாக அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் செவிலியரும் பங்கேற்பதாக இருந்தது.

இந்த நிலையில், செவிலியா் போராட்டம் சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான அரசுக்கு தற்காலிக வெற்றி என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT