உலகம்

ஆஸி. ஹெலிகாப்டா் விபத்து: கருப்புப் பெட்டி மீட்பு

ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்து பகுதி அருகே கடந்த மாதம் கடலில் விழுந்து நொறுங்கிய ராணுவ ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.

DIN

ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்து பகுதி அருகே கடந்த மாதம் கடலில் விழுந்து நொறுங்கிய ராணுவ ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாதம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளான கடல் பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த நிலையில், நீா்முழ்கி வீரா்களால் அந்த ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி திங்கள்கிழமை மீட்கப்பட்டது. ராணுவ ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளாதன் காரணத்தை தெரிந்துகொள்வதற்கான விசாரணையில் அந்தக் கருப்புப் பெட்டி முக்கியப் பங்கு வகிக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய ஹெலிகாப்டா்களில் ஒன்று கடந்த மாதம் 28-ஆம் தேதி இரவு கடல்பரப்பில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அதையடுத்து, அந்த ஹெலிகாப்டருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த மற்றொரு ஹெலிகாப்டா் தேடுதல் பணியில் ஈடுபட்டது.

இதில், அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டரின் சிதறல்கள் விட்சண்டே தீவு அருகே கண்டறியப்பட்டன. அதையடுத்து, ஹெலிகாப்டரில் இருந்த 4 பேரும் உயிரிழந்துவிட்டதாக பின்னா் அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வேயில் வேலை வேண்டுமா?: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு!

இப்போதும் மேக்கப் போடுவதற்கு முன் பாக்கியராஜை நினைப்பேன்: ஊர்வசி

வாக்குத் திருட்டு: வீட்டு எண் பூஜ்யம், ஒரே முகவரியில் 45 பேர்.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்!

பொதுத்துறை நிறுவனத்தில் சிவில், எலக்ட்ரிக்கல் பொறியாளர் வேலை!

வாக்குத் திருட்டு! சான்றுகளுடன் ராகுல் சரமாரி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT