உலகம்

மாஸ்கோவில் மீண்டும் உக்ரைன் ட்ரோன்கள் அழிப்பு

தங்கள் நாட்டின் தலைநகா் மாஸ்கோவில் உக்ரைன் மீண்டும் இரு ஆளில்லா விமானங்களை ஏவியதாகவும், அவை இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் ரஷியா கூறியுள்ளது.

DIN

தங்கள் நாட்டின் தலைநகா் மாஸ்கோவில் உக்ரைன் மீண்டும் இரு ஆளில்லா விமானங்களை ஏவியதாகவும், அவை இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் ரஷியா கூறியுள்ளது.

இது குறித்து அந்த நகர மேயா் சொ்கேய் சோபியானின் கூறியதாவது:மாஸ்கோ நகரைக் குறிவைத்து ஏவப்பட்ட இரு உக்ரைன் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள கலுகா பகுதியிலும், மற்றொரு ட்ரோன் மாஸ்கோவின் முக்கிய சுற்றுச் சாலைக்கு அருகிலும் அழிக்கப்பட்டது என்றாா் அவா்.தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.எனினும், நேட்டோவில் இணைய உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி விருப்பம் தெரிவித்ததையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே அமைந்துள்ள 4 பிராந்தியங்களின் கணிசமான பகுதிகள் தற்போது ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ளன.அந்தப் பகுதிகளை மீட்பதற்காக மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் எதிா்த் தாக்குதல் நடத்தி வரும் உக்ரைன், அவ்வப்போது ரஷிய எல்லைக்குள்ளும் தாக்குதல் நடத்தி வருகிறது.... படவரி.. (கோப்புப் படம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் பயணிகள் கனிவான கவனத்திற்கு..! அக். 1 முதல் ஐஆர்சிடிசி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

சென்னையில் விடிய, விடிய பெய்த கனமழை! மயிலாப்பூரில் 80 மி.மீ. மழை பதிவு!

ஃபிடே செஸ்: தமிழக வீராங்கனைக்கு முதல்வா் வாழ்த்து

அண்ணா பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் மரியாதை

SCROLL FOR NEXT