முகப்பு
உலகம்

ஹவாய் தீவில் பயங்கர காட்டுத் தீ: 36 பேர் பலி!

ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:08 PM
பகிர்:

ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. 

அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயின் மவுயி, நகரில் காடுகளில் ஏற்பட்ட தீ நகருக்குள் பரவியது. இதனால், வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. 

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

தீ விபத்தில் பலர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மீட்புப் பணியில் அமெரிக்க கப்பற்படை, விமானப்படை மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.