உலகம்

சீனாவில் கனமழை: 29 பேர் பலி, 16 பேர் மாயம்

DIN

சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் அண்மையில் பெய்த கனமழைக்கு 29 பேர் பலியானார்கள்.

சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் அண்மையில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக மாகாணத்தில் உள்ள 110 மாவட்டங்கள், நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 3.89 மில்லியன் மக்கள் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.

மழை தொடர்பான நிகழ்வுகளில் 29 பேர் பலியாகினர். 16 பேர் மாயமாகியுள்ளனர். மொத்தம் 319,700 ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்தோடு 131,500 ஹெக்டேர் முற்றிலும் சேதமாகின. மேலும கனமழைக்கு 40,900 வீடுகள் இடிந்து விழுந்தன.

அதே நேரத்தில் 155,500 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மாகாணம் 95.81 பில்லியன் யுவான் நேரடிப் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளது. பேரழிவின் ஒட்டுமொத்த அளவு மேலும் மதிப்பிடப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT