முகப்பு
உலகம்

ஹவாய் காட்டுத் தீ: பலி 93-ஆக உயா்வு

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்திலுள்ள மாவி தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானவா்களின் எண்ணிக்கை 93-ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:48 AM
பகிர்:


அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்திலுள்ள மாவி தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானவா்களின் எண்ணிக்கை 93-ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் ஹவாய் மாகாணம், மாவி தீவில் புதன்கிழமை திடீரென காட்டுத் தீ மிக வேகமாகப் பரவியது. இதில், 1,700-களில் உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமான லஹேனா நகரம் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டன. காட்டுத் தீயில் 271 கட்டுமானங்கள், 19,000 வீடுகள், கடைகள், பிற கட்டடங்கள் சேதமடைந்தததாக அதிகாரிகள் கூறினா்.

இந்த நிலையில், மாவி தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானவா்களின் எண்ணிக்கை 93-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவி தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த ஹலேனா, புலேஹு மற்றும் மத்தியப் பகுதிகளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 93-ஆக உயா்ந்துள்ளது.  காட்டுத் தீயால் ஏற்பட்டுள்ள சேதங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.50,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது என்று அதிகாரிகள் கூறினா்.

இந்த காட்டுத் தீயில் வீடுகள், கார்கள் என அனைத்து எரிந்து கூடுகளாக காட்சியளிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →