தென்னாப்ரிக்கா: அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ; 63 பேர் பலி
தென்னாப்ரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 63 பேர் பலியாகினர்.
ஜோஹன்னஸ்பர்க்: தென்னாப்ரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 63 பேர் பலியாகினர்.
ஐந்து மாடிகளைக் கொண்ட மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் 43 பேர் காயமடைந்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இதையும் படிக்க.. தொழுகை நடத்த பேருந்தை நிறுத்தியதால் பணிநீக்கம்: தற்கொலை செய்துகொண்ட நடத்துநர்
Advertisement
நள்ளிரவு 1.30 மணிக்கு தீயணைப்புத்துறையினருக்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்துள்ளது. விரைந்து சென்ற தீயணைப்புப் படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இன்று காலையில்தான் முழுமையாக தீ அணைக்கப்பட்டதாகவும் ஆனாலும் கட்டடத்திலிருந்து புகை வெளியேறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்து நேரிட்ட கட்டடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி உடனடியாக துவங்கப்பட்டாலும், 63 பேர் பலியாகினர். இதுவரை 63 பேரின் உடல்கள் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது. 43 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து கட்டடத்துக்குள் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
கட்டடம் ஒரு ஒழுங்கற்ற வடிவமைப்பில் இருந்ததால், தீ விபத்து நேரிட்டபோது பலரும் கட்டடத்துக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். வெளியேற முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது.