முகப்பு
உலகம்

விதிமுறைகளை ஹமாஸ் மீறியதே போர் துவங்கக் காரணம்: இஸ்ரேல் பிரதமர்

காஸாவில் மீண்டும் போர் துவங்குவதற்கு ஹமாஸ் போர் நிறுத்த விதிமுறைகளை மீறியதே காரணம் என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:19 PM
தாக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் பாலஸ்தீன மக்கள் | AP
பகிர்:

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் முடிவுற்ற நிலையில், காஸாவில் தனது தாக்குதலை இஸ்ரேல்  மீண்டும் தொடங்கியுள்ளது. பிடித்துவைக்கப்பட்ட அனைத்துப் பெண் பிணைக்கைதிகளை விடுவிக்காததும் இஸ்ரேலின் மேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதுமே போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாததற்குக் காரணம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

காஸாவின் தெற்குப்பகுதிகளில் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறும்படி வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை இஸ்ரேல் வானிலிருந்து வீசியுள்ளது. அதில் கான் யூனிஸ் பகுதியை விட்டு மக்களை வெளியேறும்படி வலியுறுத்தியுள்ள நிலையில் 'கான் யூனிஸ் மிகவும் ஆபத்தான போர் பகுதி' எனவும் எச்சரித்துள்ளது.

போர் துவங்கிய சில மணி நேரங்களிலேயே 32 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயப்பட்டிருப்பதாகவும் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

போர் நிறுத்தம் முடிந்தபின், கான் யூனிஸ் பகுதியில் உள்ள பெரிய கட்டிடம், காஸாவின் மத்தியப் பகுதிகள், வடக்குப்பகுதிகள் மற்றும் மகாசி பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஹமாஸ் அமைப்பு, கைதிகள் பறிமாற்றத்தில் இஸ்ரேல் அணைத்து சமரசங்களையும் நிராகரித்ததே போர் துவங்குவதற்குக் காரணம் எனக் கூறியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →