உலகம்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 11 பேர் பலி

DIN

இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 12 பேர் மாயமாகியுள்ளனர்.

மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள மராபி எரிமலையில் ஞாயிற்றுக்கிழமை எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது. 

படாங் தேடல் மற்றும் மீட்பு படையின் தலைவர் அப்துல் மாலிக் கூறுகையில், “26 பேர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படாமல் இருந்துள்ளனர். அவர்களில் 14 பேரை கண்டுபிடித்துள்ளோம். அதில் 3 பேர் மட்டுமே உயிருடன் உள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் மாயமாகியுள்ளனர்.” என்று தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பெரும் அளவிலான சாம்பல்கள் படிந்துள்ளன. சாலை மற்றும் கார்களை குப்பைகள் மூடியுள்ளன.

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 22-ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது எரிமலை வெடிப்பில் 11 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

ஈடன் கார்டன்ஸில் மழை; போட்டி நடைபெறுமா?

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பு? தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை

ஓய்வு முடிவை அறிவித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!

மக்களவை 4-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு

SCROLL FOR NEXT