உலகம்

இஸ்ரேலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 90% குறைந்தது

DIN

டெல் அவிவ்: நவம்பர் மாதத்தில் வெளிநாட்டில் இருந்து இஸ்ரேலுக்கு  வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 90 சதவிகிதம் குறைந்துள்ளது என இஸ்ரேலின் மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காஸா​வி‌ல் கட‌ந்த அ‌க். 7-ஆ‌ம் தேதி முத‌ல் இ‌ஸ்​ரேல் நட‌த்திவரு‌ம் தா‌க்​கு​த​லி‌ல் உயி​ரி​ழ‌ந்​த​வ‌ர்​க​ளி‌ன் எ‌ண்​ணி‌க்கை 16,248-ஆக அதி​க​ரி‌த்​து‌ள்​ளது. அவ‌ர்​க​ளி‌ல் பெரு‌ம்​பா​லா​ன‌​வ‌ர்​க‌ள் பெ‌ண்​க​ளு‌ம், குழ‌ந்​தை​க​ளு‌ம் ஆவ‌ர்.

இது தவிர, இ‌ஸ்​ரே​லி‌ன் தா‌க்​கு​த​லி‌ல் இதுவரை 43 ஆயி​ர‌த்​து‌க்​கு‌ம் மே‌ற்​ப‌ட்​ட​வ‌ர்​க‌ள் காய​ம​டைந்​து‌ள்​ள​ன‌‌ர்; 7,600-‌க்கு‌ம் மே‌ற்​ப‌ட்​ட​வ‌ர்​க​ளைக் காண​வி‌ல்லை எ‌ன்று அ‌ந்த அறி‌க்​கை​யி‌ல் குறி‌ப்​பி​ட‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது.

இந்த நிலையில், நவம்பர் மாதத்தில் வெளிநாட்டில் இருந்து இஸ்ரேலுக்கு  வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 90 சதவிகிதம் குறைந்துள்ளது என இஸ்ரேலின் மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காஸா பகு​தி​யி‌ல் இ‌ஸ்ரேல் ராணு​வ‌ம் கட‌ந்த சில வார‌ங்​க​ளாக நட‌த்திவரு‌ம் தா‌க்​கு​த​‌ல் காரணமாக, நவம்பரில் இஸ்ரேலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 90 சதவிகிதம் குறைந்துள்ளது.

நவம்பர் மாதத்தில் இஸ்ரேலுக்கு 39,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்துள்ளதாகவும், இது 2022 நவம்பரில் 3,69,800 ஆக இருந்தது. இவர்களில் 42.1 சதவிகிதம் பேர் அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள்.

இதற்கிடையில், இஸ்ரேலின் மத்திய புள்ளியியல் அலுவலகம் நவம்பர் 2023 இல் வெளிநாடுகளுக்கு சென்ற இஸ்ரேலியர்களின் தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில், நவம்பர் 2022 முதல் வெளிநாடுகளுக்கு சென்ற இஸ்ரேலியர்களின் எண்ணிக்கையில் 75 சதவிகிதத்திற்கும் அதிகமான அளவில் குறைந்துள்ளது.

இஸ்ரேலியர்கள் 2022 நவம்பரில் 6,45,300 பேர் வெளிநாடுகளுக்கு பயணித்திருந்த நிலையில், 2023 நவம்பரில் 1,48,700 பேர் வெளிநாடுகளுக்கு பயணித்திருப்பதாக இஸ்ரேல் மத்திய புள்ளியியல் அலுவலக தரவுகள் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் உள்ளூர்க் கடையில் தாடியை 'டிரிம்' செய்துகொண்ட ராகுல் காந்தி!

மும்பை: 100 அடி உயர விளம்பரப் பலகை விழுந்து விபத்து -உயிரிழப்பு 14 ஆக உயர்வு

4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: 67% வாக்குப் பதிவு -தோ்தல் ஆணையம் தகவல்

கோட் படத்தின் ’போஸ்ட் ப்ரொடக்‌ஷன்’ தொடங்கியது!

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

SCROLL FOR NEXT