கோப்பு 
உலகம்

அமெரிக்கா: செனட்டர் தேர்தலில் இந்திய வம்சாவழி பெண்!

அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் சட்ட மேலவை உறுப்பினர் பதவிக்கி இந்திய வம்சாவழிப் பெண் போட்டியிடுகிறார்.

DIN

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அமெரிக்கரான உஷா ரெட்டி, கான்சாஸ் மாகாணத்தின் 22வது மாவட்டத்தின் செனட்டர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார்.

ஏற்கெனவே செனட்டராக பதவி வகிக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர், ஜனவரியில் டாம் ஹாக் விலகிய பிறகு இந்தப் பொறுப்பையேற்றார். தனது பதவிக்காலத்தை நீடிக்க ஜனவரி 2024-ல் போட்டியிடவுள்ளதாக எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதில் அவர், 2024 கான்சாஸ் மாகாண செனட்டர் பதவிக்கு தாக்கல் செய்துள்ளேன். பொதுமக்கள் சேவை என்பது என் வாழ்வின் ஒரு பகுதி. செனட்டராக மக்கள் பணியில் எனது அர்ப்பணிப்பைத் தொடர்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

அவரது பதவிக் காலம் ஜன. 2025-ல் நிறைவடையும். மன நலம், பொதுக் கல்வி, பாதுகாப்பு, சமத்துவம், வேலை, பொருளாதார வளர்ச்சி, உள்கட்டுமானம், குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாக அவரது இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி ஆசிரியரான இவர், மேன்ஹேட்டன் நகரத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

2016, 2017 மற்றும் 2020 ஆகிய மூன்று முறை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உஷாவின் குடும்பம் 1973-ல் ஆந்திராவில் இருந்து இடம்பெயர்ந்து ஓஹியோவில் குடியேறியுள்ளது.

உளவியல் மற்றும் கல்வி தலைமைத்துவத்தில் இவர் முதுகலை பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT