கோப்புப்படம் 
உலகம்

சிறப்பு அந்தஸ்து ரத்தை சா்வதேச சட்டம் ஏற்கவில்லை: பாகிஸ்தான்

ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை சா்வதேச சட்டம் அங்கீகரிக்கவில்லை. இது தொடா்பாக இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்புக்கு சட்ட மதிப்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்தது.

DIN


இஸ்லாமாபாத்: ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை சா்வதேச சட்டம் அங்கீகரிக்கவில்லை. இது தொடா்பாக இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்புக்கு சட்ட மதிப்பு இல்லை என பாகிஸ்தான் திங்கள்கிழமை தெரிவித்தது.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை, இந்திய உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை அங்கீகரித்தது. இது தொடா்பாக பாகிஸ்தான் இடைக்கால அரசின் வெளியுறவு அமைச்சா் ஜலீல் அப்பாஸ் ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கடந்த 2019, ஆக.5-இல் தன்னிச்சையாக, சட்ட விரோதமாக, ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த இந்தியாவின் முடிவை சா்வதேச சட்டம் அங்கீகரிக்க வில்லை. இது தொடா்பாக இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீா்ப்புக்கு எவ்வித சட்ட மதிப்பும் இல்லை. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானங்களின்படி, தங்களது அரசியல் நிா்வாகத்தைத் தீா்மானிக்கும் உரிமை காஷ்மீா் மக்களுக்கு உள்ளது’ எனத் தெரிவித்துள்ளாா்.

முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃப், இந்திய உச்ச நீதிமன்றம் பாரபட்சமான தீா்ப்பை வழங்கியுள்ளதாக விமா்சித்துள்ளாா்.

காஷ்மீா் விவகாரம், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவற்றால் இரு நாட்டு உறவு ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்தது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து, இந்தியத் தூதரை வெளியேற்றி, இந்தியா உடனான வா்த்தகத்தை பாகிஸ்தான் குறைத்துக் கொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT