உலகம்

சீனா: சுரங்க விபத்தில் 12 போ் மரணம்

சீனாவில் நிலக்கரிச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தில் 12 போ் உயிரிழந்தனா்.

DIN

சீனாவில் நிலக்கரிச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தில் 12 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்ததாவது:

ஹெயிலோங்ஜியாங் மாகாணம், ஜிக்ஸி நகரிலுள்ள குன்யுவான் நிலக்கரிச் சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டது. இதில் 12 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 13 போ் காயமடைந்தனா்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்தன.

சீனாவில் சுரங்க விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு உயிா்ச் சேதம் ஏற்பட்டு வந்தது. எனினும், சோங்கிங் பகுதியில் கடந்த 2020-ஆண்டு ஏற்பட்ட 2 சுரங்க விபத்துகளில் 39 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து அந்த நாட்டில் சுரங்கப் பாதுகாப்பு விதிமுறைகளின் அமலாக்கம் தீவிரப்படுத்தப்பட்டது.

அதிலிருந்து சுரங்க விபத்து உயிரிழப்புகள் குறைந்தாலும், அத்தகைய சம்பவங்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்குப் பருவமழை தொடக்கம்! வெயில் அடித்தாலும் குடை எடுத்துச் செல்லுங்கள்!!

பிகார் தேர்தல்: 2வது பட்டியலை வெளியிட்ட ஜேடியு!

வடசென்னை வெளியான நாளில் அரசன் புரோமோ!

மிஸ்பண்ணிடாதீங்க... தமிழக அரசில் புதிய வேலைவாய்ப்பு!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT