இஸ்ரேல் ராணுவம் 
உலகம்

இன்று காஸாவில் என்ன நடந்தது?

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் காஸாவில் பலி எண்ணிக்கை 21,000-த்தைத் தாண்டியுள்ளது. 

DIN

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போருக்கு இரையாகி, பாதி உயிரோடு துடித்துக்கொண்டிருக்கும் காஸா, இன்று என்னென்ன இன்னல்களைச் சந்தித்தது என்ற விபரங்கள் கீழே,

இன்று காலை இஸ்ரேலால் கான் யூனிஸ் மற்றும் மகாசியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கான் யூனிஸ் தெற்குப்பகுதியில் உள்ள எல் அமல் நகர மருத்துவமனைப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 12 பேர் காயப்பட்டுள்ளதாக பாலஸ்தீன செஞ்சிலுவை அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

மேலும் இரண்டு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை மொத்தம் 105 பத்திரிகையாளர்கள் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,139 பேர் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேல் 21,000த்திற்கும் அதிகமானோரைக் கொன்று குவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

பெருமாநல்லூா் அருகே கஞ்சா விற்றவா் கைது

பெண்ணிடம் 5 பவுன் நகைகளைத் திருடியவா் கைது

புகையிலைப் பொருள்கள் விற்ற 3 போ் கைது

ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கோயிலை அகற்ற வந்த அதிகாரிகள்: பொதுமக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT