உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

DIN


இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தின் ஒரு பகுதியில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. 

நிலநடுக்கமானது 10 கி.மீ ஆழத்திலும், ஆச்சே மாகாணத்தின் கடலோர நகரமான சினாபாங்கிற்கு கிழக்கே 362 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. 

சுனாமி ஆபத்து இல்லை என்றாலும் நிலநடுக்கத்தால் பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என இந்தோனேசிய வானியல் மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக கடந்த நவம்பரில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 331 பேர் கொல்லப்பட்டனர். 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

கடந்த 2018ல் சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சுமார் 4.300 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

SCROLL FOR NEXT