உலகம்

ஐபோன்களில் மைக்ரோசாப்டின் செய்யறிவு தொழில்நுட்பம்!

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது செய்யறிவு தொழில்நுட்பமான கோபைலட்டை (Copilot) ஐபோன்களுக்கு செயலி வடிவில் அறிமுகம் செய்துள்ளது. 

DIN

சாட் ஜிபிடி (ChatGPT), பார்டு (Bard), ஜெமினை (Gemini), க்ரோக் (Grok) என பல செய்யறிவு தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி அசத்திக்கொண்டிருக்கும் சமயத்தில் மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் தனது செய்யறிவு தொழில்நுட்பத்தை போட்டியில் நிறுத்தியிருக்கிறது.

மைக்ரோசாப்டின் செய்யறிவு தொழில்நுட்பமான கோபைலட் (Copilot) இப்போது ஐபோன் மற்றும் ஐபேட்-களில் செயலி வடியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சேட் கிபிடி-4 திறன்களை செல்போன்களுக்கு கொண்டுவந்த பெருமையை மைக்ரோசாப்ட் நிறுவனம் தட்டிச்சென்றுள்ளது.

இந்த செய்யறிவு தொழில்நுட்பம் இதுவரை வலைதளங்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருந்தது. இப்போது செயலி வடிவில் ஐபோன்களிலும் செயல்படும் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. விரைவில் ஆன்ட்ராய்டு செல்போன்களுக்கு இந்த சேவைகள் அறிமுகமாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொழில்நுட்பம் பல்வேறு மொழிகளில் பேசும் திறன்கொண்டது எனவும், கேட்கும் வகையில், தரவுகளை வடிவமைத்துத் தரக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் உண்மையான தகவல்களை மட்டுமே இது கையாள்வதாக மைக்ரோசாப்ட் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கோபைலட் செய்யறிவு தொழில்நுட்பம் எழுத்துவடிவிலான சேவைகளை திறன்வாய்ந்த வகைகளில் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து செய்யறிவு தொழில்நுட்பங்களைப் போலவே செயல்படும் இந்த கோபைலட்டில் மிக விரைவில் பிரமிப்பூட்டும் வசதிகள் அறிமுகப்படுத்தப்படுமென எதிர்பார்க்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

வசீகரத்தின் உறைவிடம்... ஜொனிதா காந்தி!

சுவர் இருப்பின் சித்திரம்... நிகிதா ஷர்மா!

காஷ்மீரில் சண்டை எப்போது முடிவுக்கு வரும்? ஃபரூக் அப்துல்லா பதில்!

ஊட்டல் தேவஸ்தானத்தில் ஆடிப்பெருக்கு விழா

SCROLL FOR NEXT