சியோல்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், 2024 ஆம் ஆண்டில் வட கொரியாவின் இலக்குகள் குறித்து பேசியுள்ளார்.
வட கொரியாவில் ஆளும் தொழிலாளர்கள் கட்சியின் அடுத்த ஆண்டுக்கான இலக்குகளைத் தீர்மானிக்கும் கூட்டத்தில் பேசிய கிம் ஜாங் உன், வட கொரியா, மூன்று கூடுதல் உளவு செயற்கைகோள்களை வருகிற ஆண்டு ஏவ இருப்பதாகவும் அணு ஆயுதங்களையும் ஆளில்லாத ராணுவ தளவாடங்களைக் கட்டமைக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தலைமையிலான மோதல் நகர்வுகளை எதிர்கொள்ள முன்கூட்டிய தயார்நிலையை உறுதி செய்ய இந்த நடவடிக்கைகளை வடகொரியா மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
அரசியல் கவனிப்பாளர்கள், கிம் தனது ஆயுத பரிசோதனைகளை நிறுத்துவதன் மூலமாகவும் அணுஆயுத நீக்கத்துக்கு உடன்படுவதன் மூலமாகவும் ஐநாவின் பொருளாதார தடையில் இருந்து மீளலாம். கிம்முக்கு அந்த எண்ணமில்லை எனத் தெரிவிக்கிறார்கள்.
சனிக்கிழமை, முடிவு பெற்ற 5 நாள்களுக்கான கட்சிக் கூட்டத்தில் கிம், அமெரிக்கா மற்றும் அதன் பின்தொடரும் நாடுகள் வட கொரியா மீது இந்தாண்டு நிகழ்த்தியது எதிர்பாராதது எனவும் இந்த நடவடிக்கைகள் தான் வடகொரியாவை அணு ஆயுதம் நோக்கி செலுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பிரிக்ஸில் இணைய மறுத்த ஆர்ஜென்டீனா: காரணம் இதுதான்!
மேலும் அவர், “மிக மோசமான இந்த நிலை என்பது போரை எதிர்கொள்ள நமது முழு திறனையும் தயார் செய்யக் கோருகிறது. நேர்த்தியான ராணுவ தயார்நிலை எந்தப் பக்கத்திலிருந்து தாக்குதல் நிகழ்ந்தாலும் அதனை ஒடுக்க போதுமானதாக இருக்க வேண்டும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.