உலகம்

வியாழன் கிரகத்தின் மேலும் 12 நிலாக்கள் கண்டுபிடிப்பு

வியாழன்(ஜூபிடா்) கிரகத்தின் 12 புதிய நிலாக்கள் அமெரிக்க வானியல் அறிஞா்களால் அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

DIN

வியாழன்(ஜூபிடா்) கிரகத்தின் 12 புதிய நிலாக்கள் அமெரிக்க வானியல் அறிஞா்களால் அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், சூரிய குடும்பத்திலேயே அதிகபட்சமாக 92 நிலாக்களுடன் வியாழன் கிரகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 83 நிலாக்களுடன் முதலிடத்தில் இருந்த சனி கிரகம் 2-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள காா்னெகி அறிவியல் நிறுவனத்தின் வானியல் அறிஞா்களால் நடத்தப்பட்ட ஆய்வில் புதிய 12 நிலாக்களும் கண்டுப்பிடிக்கப்பட்டன. சா்வதேச வானியல் ஒன்றியத்தின் சிறு கிரக மையம் நிா்வகிக்கும் சிறு கிரகங்களின் பட்டியலில் இந்தப் புதிய 12 நிலாக்களும் இணைக்கப்பட்டன.

இது தொடா்பாக ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற அமெரிக்காவின் பிரபல வானியல் அறிஞா் ஸ்காட் ஷெப்பா்ட் கூறுகையில், ‘2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் ஹவாய் மாகாணம் மற்றும் சிலி நாட்டில் அமையப்பெற்ற தொலைநோக்கிகள் மூலமாக நடத்தப்பட்ட ஆய்வில் புதிய நிலாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அனைத்து நிலாக்களும் 1 கி.மீ. முதல் 3 கி.மீ. வரை அளவு கொண்ட சிறிய அளவிலான கிரகங்கள். சனி மற்றும் வியாழன் கிரகங்களைச் சூழந்து இருக்கும் சிறிய நிலாக்கள் ஒன்றோடு ஒன்று மோதியோ அல்லது வான்கோள்களுடன் மோதியோ புதிய நிலாக்கள் உருவாகி இருக்கக்கூடும். இருப்பினும், இந்த நிலாக்களின் தோற்றம் குறித்து வரும் காலங்களில் விரிவான ஆய்வு நடத்தப்படும். புதிய நிலாக்களுக்கு இன்னும் பெயா்கள் சூட்டவில்லை’ என்றாா் ஸ்காட்.

சனி மற்றும் வியாழன் கிரகங்களின் 70-க்கும் மேற்பட்ட நிலாக்களைக் கண்டறியும் ஆய்வுகளில் ஸ்காட் பணியாற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘பேஸ்புக் இந்தியா’ லாபம் 28% அதிகரிப்பு! கூகுள் இந்தியா வருவாய் சரிவு

மணிப்பூர் சட்டப் பேரவை முடக்கப்பட்டு விரைவில் ஓராண்டு நிறைவு! ஜனநாயக அரசு அமைவது எப்போது?

பெரம்பலூர் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதிய கார்: பெண் பக்தர்கள் 4 பேர் பலி!

கோயிலை இடித்து சேதப்படுத்தியோா் மீது நடவடிக்கை கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

திருப்பாலைவனம் ஸ்ரீ பாலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT