உலகம்

லிபியாவில் இருந்து துருக்கி, சிரியாவுக்கு 2 விமானங்களில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

DIN

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவுக்கு 2 விமானங்களில் நிவாரணப் பொருட்களை லிபியா அனுப்பியுள்ளது. 

இதுகுறித்து லிபிய அதிகாரி ஜிப்ரில் ஷ்டெவி, கூறியதாவது, நாங்கள் நிவாரணப் பொருட்கள் மற்றும் 70 க்கும் மேற்பட்ட மருத்துவ, அவசர மற்றும் மீட்புப் பணியாளர்களை விமானங்களில் அனுப்பியுள்ளோம். லிபிய குழுக்கள் இதுவரை 27 பேரை காப்பாற்றியுள்ளன, 53 உடல்களை மீட்டுள்ளன. 

அதோடு தெற்கு துருக்கியில் 400 க்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளன. மேலும் லிபிய அரசு, 55 மீட்பு மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் நான்கு துப்பறியும் நாய்களை துருக்கிக்கு அனுப்பியுள்ளது. 

கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 30,000 க்கும் அதிகமானோர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

திரைக்கதிர்

சன் ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!

பிரதமர் மோடி ஓய்வு பெற்றால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT