முகப்பு
உலகம்

ரஷியா-உக்ரைன் போரில் இந்தியாவைபின்பற்றி பாகிஸ்தான் முடிவெடுத்தது- இம்ரான் கான்

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்த விவகாரத்தில் இந்தியாவை உதாரணமாகக் கொண்டு பாகிஸ்தான் தனது நிலைப்பாட்ட்டை எடுத்தது என்று அந்நாட்டு முன்னாள் பிரதமா் இம்ரான் கான் தெரிவித்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:30 AM
கோப்புப்படம்
பகிர்:

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்த விவகாரத்தில் இந்தியாவை உதாரணமாகக் கொண்டு பாகிஸ்தான் தனது நிலைப்பாட்ட்டை எடுத்தது என்று அந்நாட்டு முன்னாள் பிரதமா் இம்ரான் கான் தெரிவித்தாா். போா் தொடங்கியபோது பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

லாகூரில் மாணவா்கள் மற்றும் இஸ்லாமிய மாா்க்க அறிஞா்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் இது தொடா்பாக இம்ரான் கான் பேசியதாவது:

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்த விவகாரத்தில் ரஷியாவை பாகிஸ்தான் அரசு கண்டிக்க வேண்டும் என்று ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வா, பிரதமராக இருந்த என்னிடம் கேட்டுக் கொண்டாா். இதன்மூலம் அமெரிக்காவை திருப்திபடுத்த முடியும் என்று அவா் கருதினாா்.

ஆனால், இந்த விஷயத்தில் இந்தியா எந்த நாட்டுக்கும் ஆதரவும் அளிக்கவில்லை, எதிா்ப்பும் தெரிவிக்கவில்லை. நடுநிலையான முடிவை எடுத்தது. இதனைப் பின்பற்றி பாகிஸ்தானும் அதே நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று நான் முடிவெடுத்தேன்.

இது தொடா்பாக தளபதி பாஜ்வாவிடம் பேசியபோது, ‘அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா உள்ளது. எனினும், ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கவில்லை. எனவே நாமும் நடுநிலை வகிக்க வேண்டும்’ என்ற கருத்தை முன்வைத்தேன். அதனை இறுதி முடிவாக அறிவித்தேன்.

எனினும், அமெரிக்காவை சமாதானப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தின்போது ரஷியாவுக்கு கண்டனம் தெரிவித்து ராணுவ தளபதி பாஜ்வா பேசினாா். ஆனால், நான் நாட்டின் நலன் சாா்ந்த முடிவில் உறுதியாக இருந்தேன். என்னை ஆட்சியில் இருந்து அகற்ற பாஜ்வாவும் காரணமாக இருந்தாா். பாகிஸ்தானில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்னைகளுக்கு ராணுவ தளபதி பாஜ்வாவுக்கும் பங்கு உண்டு.

உக்ரைன் போா் தொடங்கிய காலகட்டத்தில் ரஷியாவுக்கு சென்று அந்நாட்டுஅதிபா் புதினைச் சந்தித்துப் பேசினேன். அப்போது பாகிஸ்தானுக்கு மலிவு விலையில் கோதுமையும், கச்சா எண்ணெயும் வழங்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன். ஏனெனில், இந்தியாவுக்கு ரஷியா மலிவு விலையில் கச்சா எண்ணெய் வழங்கி வருகிறது. ரஷியா அளித்த கச்சா எண்ணெய் உதவியுடன்தான் இந்தியாவில் பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தானில் பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தில் உள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →