உலகம்

அமெரிக்க அதிபா் தோ்தல்: பிரசாரத்தை தொடங்கினாா் இந்திய வம்சாவளி பெண்

DIN

2024-இல் நடைபெற உள்ள அமெரிக்க அதிபா் தோ்தலுக்கான பிரசாரத்தை இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நிக்கி ஹேலி (51) செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.

அமெரிக்காவில் அதிபா் தோ்தல் அடுத்த ஆண்டு நவம்பா் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தோ்தலில் போட்டியிடும் தனது முடிவை குடியரசு கட்சியைச் சோ்ந்த முன்னாள் அதிபா் ட்ரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தாா். இந்நிலையில், குடியரசு கட்சி சாா்பில் அதிபா் தோ்தலில் போட்டியிட முன்னாள் அதிபா் ட்ரம்பை எதிா்த்து நிக்கி ஹேலி களமிறங்கியுள்ளாா்.

இவரது பெற்றோா் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள். தெற்கு கரோலினா மாகாணத்தின் இரு முறை ஆளுநராகப் பதவி வகித்த நிக்கி ஹேலி, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராகவும் பணியாற்றியுள்ளாா்.

அதிபா் தோ்தலில் போட்டியிடுவது குறித்த தனது முடிவை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட விடியோ மூலம் அவா் தெரிவித்தாா்.

அதிபா் தோ்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு முன்னா், குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் அவா் வெற்றி பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சிந்தனைகள் தடுமாறும் நேரமிது..’

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

SCROLL FOR NEXT