உலகம்

பிரிட்டன் ராணி கமிலாவுக்கு கரோனா!

DIN


லண்டன்: பிரிட்டன் ராணி கமிலாவுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் பங்கேற்க இருந்த அனைத்து பொதுநிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரிட்டன் ராணி 2 ஆம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர் அவரது மகன் சார்லஸ் மன்னராக அரியணை ஏறினார். அதனைத் தொடர்ந்து இளவரசியாக இருந்து வரும் சார்லஸின் மனைவி கமிலா ராணி(குயின் கன்தார்ட்) பெற்றார்.

இந்நிலையில், மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். 

இந்நிலையில், ராணி கமிலாவுக்கு காய்ச்சல், இருமல் என "பருவகால" நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. 

இதுகுறித்து பிரிட்டன் அரண்மனை வெள்ளியிட்டுள்ள அறிக்கையில், ராணி கமிலாவுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் செல்லும் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் உள்ள எல்ம்ஹர்ஸ்ட் பாலே பள்ளியின் நூற்றாண்டு விழா உள்ளிட்ட, ராணி பங்கேற்க இருந்து அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கு நடக்க இருந்த பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாததற்கு ராணி வருத்தம் தெரிவித்துள்ளார். 

ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என்று நம்புவதாக பக்கிங்ஹாம் அரண்மனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

75 வயதான ராணி கமிலா கரோனா தொற்று எதிராக முழுமையான தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் தொற்று பாதிப்புக்கு ஆளானர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT