விவேக் ராமசாமி 
உலகம்

அமெரிக்க அதிபா் தோ்தல்: இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி போட்டியிட விருப்ப மனு!

அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தொழிலதிபா் விவேக் ராமசாமி (37) விருப்ப மனு அளித்துள்ளார்.

DIN

அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தொழிலதிபா் விவேக் ராமசாமி (37) விருப்ப மனு அளித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிபா் தோ்தல் அடுத்த ஆண்டு நவம்பா் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தோ்தலில் போட்டியிட குடியரசு கட்சியைச் சோ்ந்த முன்னாள் அதிபா் ட்ரம்ப் மற்றும் இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹேலி ஆகியோர் ஏற்கெனவே விருப்ப மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில், அதிபர் தோ்தலில் போட்டியிட குடியரசு கட்சியைச் சோ்ந்தவரும், இந்திய வம்சாவளி தொழிலதிபருமான விவேக் ராமசாமியும் விருப்ப மனு அளித்துள்ளார்.

கேரளத்தில் இருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயா்ந்த இந்திய தம்பதிக்கு மகனாகப் பிறந்தவா் விவேக் ராமசாமி. அவரின் தந்தை மின் பொறியாளராகவும், தாய் முதியோா் மனநல மருத்துவராகவும் இருந்தனா். அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டியில் பிறந்த விவேக் ராமசாமி, புகழ்பெற்ற ஹாா்வா்ட், யேல் பல்கலைக்கழகங்களில் படித்தவா். அவரின் சொத்து மதிப்பு 500 மில்லியன் டாலா்களுக்கும் (சுமாா் ரூ.4,140 கோடி) அதிகம் என்று கூறப்படுகிறது.

அதிபா் தோ்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு முன்னா், குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான தெரிவு போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்! டிரம்ப் அதிரடி

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

மீன்பிடி படகு மீது மோதிய சுற்றுலா பயணிகள் படகு! இளம் பெண் பலி | Thailand

பங்குச்சந்தை கடும் சரிவு! சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது!

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT