உலகம்

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்: பல கட்டடங்கள் இடிந்துவிழுந்ததாகத் தகவல்!

DIN

தெற்கு துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலநடுக்கம் மலாத்யா மாகாணத்தில் உள்ள யெசிலியூட்ர் நகரை மையமாகக் கொண்டதாக பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.

கடந்த பிப்.6இல் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம்  நாட்டையே நிலைகுலைய வைத்தது. 

துருக்கி மற்றும் சிரியா நாடுகளை மையமாகக்க் கொண்டு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தால் இருநாடுகளும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரம் மக்கள் தங்களை வீடுகளை இழந்துள்ளனர். 1,73,000 கட்டடங்கள் சேதமடைந்துள்ளனர். 

மேலும்,  சர்வதேச அளவில் நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவிற்கு உதவி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தானுடன் இணையும் கேரி கிறிஸ்டன்!

பேருந்து, ரயில், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்: வெளியான அறிவிப்பு!

‘ஏஐ படங்களில் வருவதுபோல..’ புதிய சாட்ஜிபிடி அறிமுகத்தில் சாம் ஆல்ட்மேன்!

கங்கையை ஏமாற்றிய பிரதமர் மோடி: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!

தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT