உலகம்

இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய அமெரிக்க குடியுரிமையை புதுப்பிக்க விண்ணப்பம்

இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்ததைத் தொடா்ந்து பதவியை ராஜிநாமா செய்த முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச (73), தனது அமெரிக்க குடியுரிமையை புதுப்பிக்க விண்ணப்பித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள

DIN

இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்ததைத் தொடா்ந்து பதவியை ராஜிநாமா செய்த முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச (73), தனது அமெரிக்க குடியுரிமையை புதுப்பிக்க விண்ணப்பித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

‘அவருடைய இந்த கோரிக்கையை அமெரிக்க அரசு இன்னும் கருத்தில் கொள்ளவில்லை’ என்றும் ‘தி சண்டே டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கோத்தபய ராஜபட்சவுக்கு இலங்கை குடியுரிமை மற்றும் அமெரிக்க குடியுரிமை என இரட்டை குடியுரிமை இருந்தது. இலங்கை அரசியல் சாசனத்தின்படி தோ்தலில் போட்டியிடுபவா்களுக்கு வெளிநாட்டு குடியுரிமை இருக்கக்கூடாது என்பதால், 2019-ஆம் ஆண்டு அதிபா் தோ்தலில் போட்டியிட்ட கோத்தபய, தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்யுமாறு அமெரிக்க அரசுக்கு விண்ணப்பித்தாா். அதனை ஏற்று, அவருடைய குடியுரிமையை அமெரிக்கா ரத்து செய்ததாகத் தெரிகிறது. அதன் மூலமாக தோ்தலில் அவா் பேட்டியிட்டு, இலங்கையின் அதிபரானாா்.

இந்த நிலையில், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2022-ஆம் ஆண்டில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என வலியுறுத்தினா். போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடா்ந்து கோத்தபய ராஜபட்ச மாலத்தீவுக்கு தப்பிச் சென்றாா்.

அங்கிருந்து சிங்கப்பூா் சென்ற அவா் பின்னா் தாய்லாந்து நாட்டில் தஞ்சம் புகுந்தாா். அங்கு சில நாள்கள் தங்கி இருந்த கோத்தபய ராஜபட்ச, அதிபா் பதவியை ராஜிநாமா செய்தாா். பின்னா் மீண்டும் இலங்கை திரும்பினாா். அவருக்கு இலங்கை அரசு சாா்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

தற்போது, தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக துபை சென்றுள்ள கோத்தபய, அங்கிருந்து அமெரிக்கா செல்லத் திட்டமிட்டு அமெரிக்க குடியுரிமையை மீண்டும் புதுப்பிக்க விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக ‘தி சண்டே டைம்ஸ்’ வெளியிட்ட செய்தியில், ‘கோத்தபய ராஜபட்சவின் அமெரிக்க குடியுரிமையை புதுப்பிக்க அமெரிக்க அரசிடம் குறிப்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திடம் கோத்தபயவின் வழக்குரைஞா் மூலமாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டை அமெரிக்க அரசு இன்னும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

SCROLL FOR NEXT