பறவைக் காய்ச்சல்: மகாராஷ்டிரத்தில் 45 கோழிகள் பலி 
உலகம்

டென்மார்கில் பறவைக் காய்ச்சல்: 50 ஆயிரம் கோழிகளை அழிக்க முடிவு!

மேற்கு டென்மார்க்கில் உள்ள ஒரு பண்ணையில் பறைவைக் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து 50 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட உள்ளதாக மீன்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

DIN

மேற்கு டென்மார்க்கில் உள்ள ஒரு பண்ணையில் பறைவைக் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து 50 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட உள்ளதாக மீன்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தலைநகர் கோபன்ஹேஜனுக்கு மேற்கே 177 கி.மீ தொலைவில் உள்ள ஹெடஸ்டெட் நகராட்சியின் அருகிலுள்ள பண்ணையில் பறவை காய்ச்சலால் பல கோழிகள் இறந்ததைக் கண்டுபிடிக்கப்பட்டது. புத்தாண்டு தினத்தன்று கோழிகளுக்கு இந்த வைரஸ் காய்ச்சல் பரவியிருப்பது முதன்முதலில் கண்டறியப்பட்டது.

பண்ணையில் உள்ள கோழிகள் அதிகம் தொற்று ஏற்படுத்தக்கூடிய எச்5என்1 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக தொற்று மேலும் பரவாமல் தடுக்க 50 ஆயிரம் கோழிகளை அழிக்க உள்ளதாக டேனிஷ் கால்நடை மற்றும் உணவு நிர்வாகத்தின் லோட்டே பிரிங்க் கூறினார். 

பாதிக்கப்பட்ட அனைத்து கோழிகளும் அழிக்கப்பட்டு, அகற்றப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து முழு பண்ணையையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் என்று அவர் கூறினார். பண்ணையைச் சுற்றி 10 கி.மீட்டர் தொலைவுக்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

டென்மார்க்கில் அக்டோபர் 2022க்குப் பிறகு, நான்காவது முறையாக, மிகப்பெரிய அளவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இதுவாகும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

SCROLL FOR NEXT