உலகம்

பிளாஸ்டிக் பலூனில் சமையல் எரிவாயுவை எடுத்து செல்லும் பாகிஸ்தான் மக்கள்!

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவில் உள்ள மக்கள் சமையல் எரிவாயுவை பிளாஸ்டிக் பலூன்களில் எடுத்து செல்லும் காட்சி பிரபலமாகி உள்ளது.

DIN

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவில் உள்ள மக்கள் சமையல் எரிவாயுவை பிளாஸ்டிக் பலூன்களில் எடுத்து செல்லும் காட்சி பிரபலமாகி உள்ளது.

பாகிஸ்தானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை உள்ளதால் சமையல் எரிவாயுயை பிளாஸ்டிக் பலூனில் சேகரித்து செல்கின்றனர்.

எரிவாயு விற்பனையாளர்கள் ஒரு கம்ப்ரசரைப் பயன்படுத்தி சமையல் எரிவாயுவை ஒரு பிளாஸ்டிக் பையில் நிரப்பி, வால்வு மூலம் மூடி. பின்னர் மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள்.

பின்னர் மக்கள் ஒரு சிறிய மின்சார உறிஞ்சும் பம்ப் உதவியுடன் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்துகிறார்கள். பிளாஸ்டிக் பைகளில் மூன்று முதல் நான்கு கிலோ எரிவாயுவை நிரப்ப தோராயமாக ஒரு மணி நேரம் ஆகும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் ஊடக அறிக்கையின்படி, கைபர் பக்துன்க்வாவின் கரக் பகுதியில் உள்ள மக்களுக்கு 2007 முதல் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படவில்லை, அதே நேரத்தில் ஹாங்கு நகரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக  சமையல் எரிவாயு வழங்கப்டாமல் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT