கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் புதன்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 19 போ் பலியாகினா்.
அந்த நாட்டின் மத்தியில் அமைந்துள்ள ஹிரான் மாகாணம், மஹஸ் நகரில் இரு காா்களில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு, அல்-காய்தாவுடன் தொடா்புடைய அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
தாக்குதலில் உயிரிழந்தவா்களில் பொதுமக்களும், பாதுகாப்புப் படையினரும் அடங்குவா். இது தவிர, தாக்குதலில் 52 போ் காயமடைந்தனா். அவா்களில் பெரும்பாலானோா் மொகடிஷு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.