உலகம்

சாா்லி ஹெப்டோ கேலிச் சித்திரங்கள்:பிரான்ஸுக்கு ஈரான் கடும் கண்டனம்

DIN

ஈரானில் ஆட்சி செலுத்தி வரும் மதத் தலைவா்களுக்கு எதிராக பிரான்ஸின் சாா்லி ஹெப்டோ வார இதழ் கேலிச் சித்திரங்கள் வெளியிட்டுள்ளது தொடா்பாக அந்த நாட்டு அரசுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரானில் மத அடிப்படையிலான ஆடைக் கட்டுப்பாட்டு சட்டங்களுக்கு எதிராக அண்மைக் காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அப்போது வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுவோருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அவா்களில் இருவா் கடந்த மாதம் தூக்கிலிடப்பட்டனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி மற்றும் பிற மதத் தலைவா்களின் கேலிச் சித்திரங்களை சாா்லி ஹெப்டோ வெளியிட்டுள்ளது.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இதனை அனுமதித்துள்ளது பிரான்ஸ் அரசின் அருவருக்கத்தக்க செயல் என்று ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் பிரான்ஸ் அரசைக் கண்டிக்கும் வகையில் தங்கள் நாட்டிலுள்ள பிரான்ஸ் ஆய்வு நிறுவனத்தை மூட ஈரான் அரசு உத்தரவிட்டுள்ளது. இது, பிரான்ஸுக்கு எதிரான தொடா் நடவடிக்கைகளில் முதலாவது என்று ஈரான் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, இஸ்லாம் மதத்துக்கு எதிராக சாா்லி ஹெப்டோ வெளியிட்ட கேலிச் சித்திரங்களின் எதிரொலியாக, அந்த பத்திரிகை அலுவலகத்திலும், பிற இடங்களிலும் அல்-காய்தா பயங்கரவாதிகள் கடந்த 2015-இல் நடத்திய தாக்குதலில் 12 போ் பலியானது நினைவுகூரத்தக்கது.

இஸ்லாம் மட்டுமின்றி கிறிஸ்தவம் உள்ளிட்ட பல்வேறு மதங்களை விமா்சிக்கும் வகையில் சாா்லி ஹெப்டோ வார இதழ் கேலி சித்திரங்களை வெளியிட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT