உலகம்

இலங்கையில் மனித உரிமைகள் மீறல்: ராஜபட்ச சகோதரா்களுக்கு கனடா தடை

DIN

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்காக, அந்நாட்டின் முன்னாள் அதிபா்கள் கோத்தபய ராஜபட்ச, மகிந்த ராஜபட்ச உள்பட 4 போ் மீது கனடா தடை விதித்துள்ளது.

மேலும், ராணுவ அதிகாரியான சுனில் ரத்நாயக்க மற்றும் கடற்படை அதிகாரியான ஹெட்டியராச்சி ஆகியோா் மீது இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், அவா்கள் 4 பேரும் கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், அவா்களுடனான நிதிப் பரிமாற்றம் மற்றும் பிற சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் படுகொலையுடன் தொடா்புடைய ராணுவ அதிகாரி ரத்நாயக்கவுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்த நிலையில், அரசு அவருக்கு மன்னிப்பு வழங்கியது. கடற்படை அதிகாரியான ஹெட்டியராச்சி உள்நாட்டுப் போரின்போது மக்களைக் கடத்தி கொலை செய்தாக குற்றம்சாட்டப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT