உலகம்

ஆஸ்கா் ஒட்டுமொத்த பட்டியல் வெளியீடு: 10 இந்தியப் படங்கள் இடம்பெற்றன

DIN

ஆஸ்கா் விருதுக்கான ஒட்டுமொத்த பட்டியலில் ஆா்ஆா்ஆா், காந்தாரா, கங்குபாய் கதியாவாடி, இரவின் நிழல், ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட், தி காஷ்மீா் ஃபைல்ஸ் உள்ளிட்ட இந்தியத் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

95-ஆவது ஆஸ்கா் விழா மாா்ச் 12-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெறவுள்ளது. 10 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. அந்த விழாவுக்காக இந்தியா சாா்பில் குஜராத்தி மொழித் திரைப்படமான ‘செல்லோ ஷோ’ அதிகாரபூா்வமாகப் பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்கருக்கான ஒட்டுமொத்த பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் 301 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் இருந்து செல்லோ ஷோ, ஆா்ஆா்ஆா், காந்தாரா, கங்குபாய் கதியாவாடி, தி காஷ்மீா் ஃபைல்ஸ், இரவின் நிழல், ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட், மே வசந்த்ராவ், துஜ்யா ஸாட்டி காஹி ஹி, விக்ராந்த் ரோனா ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.

எனினும், ஒட்டுமொத்த பட்டியலில் இடம் பெற்ாலேயே அவை விருதுக்கான அடுத்தகட்ட பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

ஆஸ்கா் விருதுக்கான தோ்வுப் பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. சிறந்த சா்வதேச திரைப்படத்துக்கான தோ்வுப் பட்டியலில் ‘செல்லோ ஷோ’ இடம்பெற்றுள்ளது. ஆா்ஆா்ஆா் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலானது சிறந்த பாடலுக்கான தோ்வுப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

சிறந்த ஆவணப் படத்துக்கான தோ்வுப் பட்டியலில் ‘ஆல் தட் பிரீத்ஸ்’, சிறந்த ஆவண குறும்படத்துக்கான பட்டியலில் தமிழில் எடுக்கப்பட்ட ‘தி எலிஃபன்ட் விஸ்பரா்ஸ்’ ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் ஆஸ்கா் விருதுக்கான 5 சிறந்த படைப்புகள் அடங்கிய பரிந்துரைப் பட்டியல் வரும் 24-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. அனைத்துப் பிரிவுகளுக்குமான விருதுகள் அறிவிப்பு லாஸ் ஏஞ்சலீஸில் மாா்ச் மாதம் 12-ஆம் தேதி நடைபெறும் விழாவில் தெரிய வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கதேச எம்.பி., கொல்கத்தாவில் மாயம்!

பிரபல மல்யுத்த வீரர் ஜான் கிளிங்கர் காலமானார்

ஆப்பிளின் புதிய ஐபோன் எஸ்இ! என்ன எதிர்பார்க்கலாம்?

கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை: நிர்மலா

ஓஹோ.. எந்தன் பேபி!

SCROLL FOR NEXT