உலகம்

அதிபர் ஜோ பைடன் வீட்டில் அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டெடுப்பு!

DIN

அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோ பைடன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஆவணங்களில் என்ன இருந்தது என்பது குறித்து வெளியிடப்படவில்லை. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை அதிபராக இருந்த 2009 முதல் 2016 ஆண்டு வரையிலான ஆணவங்கள் என்றும், ஒபாமா நிர்வாகத்தின் உக்ரைன், சீனாவில் உளவுத்துறை சேகரிக்கும் தகவல்கள் மற்றும் ஈரானின் ஏவுகணைத் திட்டம் பற்றிய முக்கியத் தகவல்களை உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசின் அதி முக்கிய, ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோ பைடனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், பைடனின் சிறப்பு ஆலோசகர் ரிச்சர்ட் சாபர் உடனடியாக நீதித்துறைக்கு அறிவித்து, அது ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதிபர் வீட்டில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக ராபர்ட் ஹுர் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து அமெரிக்க அடர்னி ஜெனரல் மெரிக் ஹார்லெண்ட் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT