கோப்புப்படம் 
உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பான் நகோயா அருகே சக்திவாந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.3 ஆக பாதிவானது.

DIN

ஜப்பான் நகோயா அருகே சக்திவாந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.3 ஆக பாதிவானது.

ஜப்பானின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள இசு-ஒகசவாரா தீவுகளில் திங்கள்கிழமை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தலைநகர் டோக்கியோவின் தெற்கே உள்ள இசு-ஒகசவாரா தீவுகளை அதிகாலை 4:49 மணியளவில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 409.1 கிலோமீட்டர் (254.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில், இன்று ஏற்பட்ட  நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோளில் 6.0 ஆக பதிவானது. 

இந்த நிலநடுக்கம் ஆக்சே மாகாண கடலோர மாவட்டமான சிங்கில் இருந்து தென்கிழக்கே 48 கிலோ மீட்டர் ஆழத்தில் நிகழ்ந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள்சேதம் குறிந்த எந்த தகவலும் இதுவரை வெளியாகிவில்லை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

TTV Dhinakaran கூட்டணியிலிருந்து விலக நயினார் நாகேந்திரன் காரணமா? குற்றச்சாட்டும் பதிலும்!

ரூ.1.88 லட்சத்துக்கு லட்டு ஏலம் வென்ற தெலங்கானா முஸ்லிம் பெண்!

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை எதிரொலி: பெரும் போராட்டம் வெடித்தது!

விழிகளில் ஒரு வானவில்... ஸ்ரீலீலா!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பிஆர்எஸ் கட்சியும் புறக்கணிப்பு!

SCROLL FOR NEXT