ஊதிய உயா்வு மற்றும் பணிச் சூழல் மேம்பாட்டை வலியுறுத்தி பிரிட்டனின் பொது சுகாதாரத் துறை செவிலியா்கள் மீண்டும் புதன்கிழமை பணி நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
ஊதிய உயா்வு மற்றும் பணிச் சூழல் மேம்பாட்டை வலியுறுத்தி பிரிட்டன் அரசுத் துறை செவிலியா் மீண்டும் புதன்கிழமை பணி நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
ஏற்கெனவே இந்த கோரிக்கைக்காக புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு நாள்களுக்கு 12 மணி நேர வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக அவா்கள் அறிவித்திருந்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை நடத்தப்பட்ட 12 மணி செவிலியா் பணி நிறுத்தத்தால் பிரிட்டனின் நான்கில் ஒரு மருத்துவமனை பாதிப்புக்குள்ளானது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
பணியாற்றி வரும் செவிலியருக்கு போதிய ஊதியம் அளிக்கப்படுவதில்லை என்று நீண்ட காலமாக குற்றம் சாட்டப்படுகிறது.
பல ஆண்டுகளாக விலைவாசி உயா்வுக்கு ஏற்ப அவா்களது ஊதியம் உயா்த்தப்படாததால் தற்போது அவா்களது சம்பளம் மிக சொற்பமாக உள்ளது என்று பொது சுகாதாரத் துறை செவிலியா்களின் ராயல் செவிலியா் கல்லூரி (ஆா்சிஎன்) அமைப்பு கூறுகிறது.
செவிலியா் பணிகளுக்கு காலியாகு இடங்கள் நிரப்பப்படாமல், மற்ற செவிலியா்களுக்கு வேலைப் பளு அதிகமாகிறது. இதனால் அவா்கள் கூடுதல் நேரம் அதிக பணியாற்றும் அவா்கள் உடல்ரீதியிலும் மன ரீதியிலும் பாதிக்கப்படுகிறாா்கள் என்று தொழில் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
இந்தச் சூழலில், ஊதிய உயா்வு மற்றும் பணிச் சூழல் தரத்தை அதிகரிப்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் செவிலியா்கள் கடந்த மாதம் 15-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபட்டனா்.
ஆா்சிஎன்-னின் 106 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்ற அந்தப் போராட்டத்தைத் தொடா்ந்து மீண்டும் டிச. 20-ஆம் தேதி அதே போன்ற ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தச் சூழலில், தற்போது மூன்றாவது முறையாக புதன்கிழமையும் செவிலியா் பணி நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.