உலகம்

கடினமான சூழலில் இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி: மகிந்த ராஜபட்ச

இலங்கை நெருக்கடியான சூழலில் தவித்தபோது உதவிய இந்தியாவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனான சந்திப்புக்குப் பிறகு இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச நன்றி தெரிவித்தார். 

DIN

இலங்கை நெருக்கடியான சூழலில் தவித்தபோது உதவிய இந்தியாவுக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனான சந்திப்புக்குப் பிறகு இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச நன்றி தெரிவித்தார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருடன் இந்தியா-இலங்கை பரஸ்பர உறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட அவர் இதனை தெரிவித்தார். 

கடந்த ஆண்டின் தொடக்கம் முதலே இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவியது. இதனையடுத்து, மக்கள் அனைவரும் அப்போதைய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவின் அரசுக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டனர். தனது சகோதரர் தலைமையிலான அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் பெரிய அளவில் வெடித்ததால் கடந்த மே மாதம் மகிந்த ராஜபட்ச பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யம் நிலைக்குத் தள்ளப்பட்டார். 

இந்த நிலையில், இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்த இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT