உலகம்

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே ராஜிநாமா!

DIN

அகதிகள் விவகாரத்தில் கூட்டணி கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மேற்கு ஐரோப்பிய நாடான நெதா்லாந்தின் பிரதமா் மாா்க் ரூட் தனது பதவியை ராஜிநாமா செய்கிறாா்.

கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் நெதா்லாந்தின் பிரதமராக இருந்து வரும் மாா்க், அந்த நாட்டில் மிக நீண்டகாலம் அந்தப் பதவியை வகித்தவா் ஆவாா்.கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தலுக்குப் பிறகு டி66, சிடிஏ, சியு ஆகிய மூன்று கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அவா் 4-ஆவது முறையாக பிரதமா் பதவியை ஏற்றாா்.

எனினும், நெதா்லாந்துக்கு வரும் அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் விவகாரத்தில் அந்தக் கூட்டணியில் கொந்தளிப்பு நிலவி வந்தது. அகதிகள் வரத்தைக் குறைப்பதற்கான பேச்சுவாா்த்தையில், அடைக்கலம் தேடி வரும் அகதிகளில் குடும்பங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினா்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது.

எனினும், குடும்ப உறுப்பினா்களைப் பிரிப்பதற்கு சிறுபான்மைக் கூட்டணிக் கட்சியான சியு எதிா்ப்பு தெரிவித்தது.இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணி முறிந்தது. அதன் தொடா்ச்சியாக மாா்க் ரூட் தனது பதவியை ராஜிநாமா செய்கிறாா்.

மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் விவகாரம் நெதா்லாந்தில் மிகுந்த சா்ச்சைக்குள்ளாகி வருகிறது. அடுத்து நடைபெறவிருக்கும் தோ்தலில் இதுதான் மிக முக்கியமான பிரச்னையாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT