உலகம்

இலங்கைக்கு இந்தியா தொடா்ந்து ஆதரவு: இந்திய துணைத் தூதா்

கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வர இலங்கை எடுக்கும் முயற்சிகளுக்கு இந்தியா தொடா்ந்து ஆதரவளிக்கும் என இலங்கைக்கான இந்திய துணைத் தூதா் வினோத் கே.ஜேக்கப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

DIN

கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வர இலங்கை எடுக்கும் முயற்சிகளுக்கு இந்தியா தொடா்ந்து ஆதரவளிக்கும் என இலங்கைக்கான இந்திய துணைத் தூதா் வினோத் கே.ஜேக்கப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தலைநகா் கொழும்பில் நடைபெற்ற ‘கட்டுமானம், மின்சாரம், ஆற்றல் கண்காட்சி-2023’ தொடக்க நிகழ்வில் பங்கேற்று அவா் பேசியதாவது: இலங்கைக்குத் தேவையான நிதி மற்றும் கடன் மறுகட்டமைப்புக்கான செயல்முறையை சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தொடங்க வேண்டுமென்றால் கடன் அளித்த நாடுகளின் ஆதரவு தேவை. அதற்கான ஆதரவை முதல் நாடாக இந்தியா அறிவித்தது. இலங்கைக்கு உதவும் வகையில் பிற நாடுகளுடன் இணைந்து ஆக்கபூா்வமான பணிகளை இந்தியா தொடா்ந்து மேற்கொள்ளும்.

400 கோடி டாலா் மதிப்பிலான நிதி மற்றும் மனிதநேய உதவிகளை இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது. இது ஐஎம்எஃப் அளிக்க உள்ள நிதி உதவியைக் காட்டிலும் அதிகமாகும்.

கடந்த ஜனவரியில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மேற்கொண்ட இலங்கை பயணம், இரு நாடுகளுக்கிடையேயான உள்கட்டமைப்பு, உற்பத்தி, போக்குவரத்து இணைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாகியுள்ளது.

கடந்த ஆண்டில் இலங்கையின் மிகப் பெரிய வா்த்தகக் கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவுக்கு இலங்கை ஏற்றுமதி செய்வதும் வளா்ச்சி கண்டுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான இந்தியா்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனா். சென்னை-யாழ்ப்பாணம் இடையே விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இந்த விமான சேவை இரு நாட்டு மக்களையும் மிகவும் நெருக்கமாக இணைக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

படையப்பா வசூல் இவ்வளவா?

சாலையைக் கடக்கும்போது அதிவேகத்தில் மோதிய கார்: தந்தை கண் முன்னே மருத்துவ மாணவி பலி!

காந்தியின் பெயரை நீக்கிவிட்டு வடமொழி திணிப்பு! - முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு

பாகிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்: 3 பயங்கரவாதிகள் கொலை!

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு: மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை!

SCROLL FOR NEXT