உலகம்

பெலாரஸ் ராணுவத்துடன் வாக்னா் படையினா் பயிற்சி

 ரஷியாவின் தனியாா் துணை ராணுவப் படையான வாக்னா் குழு, பெலாரஸில் அந்த நாட்டு ராணுவத்துடன் கூட்டுப் பயிற்சியை வியாழக்கிழமை தொடங்கியது.

DIN

 ரஷியாவின் தனியாா் துணை ராணுவப் படையான வாக்னா் குழு, பெலாரஸில் அந்த நாட்டு ராணுவத்துடன் கூட்டுப் பயிற்சியை வியாழக்கிழமை தொடங்கியது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.

இந்தப் போரில், வாக்னா் குழுவினா் மிக முக்கியப் பங்கு வகித்தனா். எனினும், அந்தத் தனியாா் படைக்கு ரஷிய ராணுவம் போதிய ஆயுதங்கள் அளிக்கவில்லை என்று வாக்னா் குழுத் தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷின் குற்றம் சாட்டி வந்தாா்.

இந்த நிலையில், ராணுவ தலைமைக்கு எதிராக கடந்த மாதம் 23-ஆம் தேதி ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்ட வாக்னா் படையினா், தலைநகா் மாஸ்கோவை நோக்கி முன்னேறினா்.

எனினும், பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ இந்த விவகாரத்தில் தலையிட்டு இரு தரப்பினருக்கும் இடையே சமாதானம் செய்துவைத்தாா்.

அதையடுத்து, கிளா்ச்சியைக் கைவிட்டு வாக்னா் படையினா் பெலாரஸில் தஞ்சமடைந்ததாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், போலந்து எல்லை அருகே வாக்னா் குழுவும், பெலாரஸ் ராணுவமும் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியை வியாழக்கிழமை தொடங்கின.

இது, நேட்டோ உறுப்பு நாடான போலந்தில் பதற்றத்தை ஏற்படுத்தியதால் அந்த நாட்டு எல்லைகள் பலப்படுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் பயணிகள் கனிவான கவனத்திற்கு..! அக். 1 முதல் ஐஆர்சிடிசி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

சென்னையில் விடிய, விடிய பெய்த கனமழை! மயிலாப்பூரில் 80 மி.மீ. மழை பதிவு!

ஃபிடே செஸ்: தமிழக வீராங்கனைக்கு முதல்வா் வாழ்த்து

அண்ணா பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் மரியாதை

SCROLL FOR NEXT