உலகம்

கிழக்கு சீனாவில் கனமழை: 5 பேர் உயிரிழப்பு; 1500 பேர் வெளியேற்றம்!

DIN

கிழக்கு சீனாவில் பெய்து வரும் கனமழையால் அந்தப் பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெள்ளத்தால் 1,500-க்கும் அதிகமானோர் அவர்களது இருப்பிடத்திலிருந்து பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்

வெள்ள பாதிப்பு குறித்து சீனாவின் தேசிய வானொலியிலும், உள்ளூர் செய்தி ஊடகங்களிலும் செய்தி வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக உள்ளூர் செய்தி ஊடகத்தில் கூறியதாவது: கனமழையால் பெரிய அளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 1,600-க்கும் அதிகமான வீடுகளில் மின்சார இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. 1,500-க்கும் அதிகமானோர் தங்களது இருப்பிடங்களில் இருந்து பத்திரமான பகுதிக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். வடக்கு சீனாவில் சில பகுதிகளில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. கிழக்கு சீனாவில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட நிலையில், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT