கோப்புப் படம். 
உலகம்

உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு: ரஷியா

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

DIN

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

ஒரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் மற்ற இரண்டும் கட்டடங்கள் மீது மோதி விழுந்ததாகவும் தெரிவித்துள்ளது. ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நேற்றிரவு உக்ரைன் திடீரென ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 கட்டடங்கள் சேதமடைந்தன. 

இருப்பினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதன்காரணமாக மாஸ்கோவில் உள்ள வ்னுகோவோ விமான நிலையத்தில் விமானப் புறப்பாடு மற்றும் வருகை நிறுத்தப்பட்டன. பின்னர் ஒரு மணி நேரத்திற்குள் அவை இயல்பு நிலைக்கு திரும்பியது.

முன்னதாக இந்த மாத தொடக்கத்திலும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக வ்னுகோவோ விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT