உலகம்

பிலிப்பின்ஸ்: நடுக்கடலில் தீப்பிடித்த படகில் பயணித்த 120 பேர் மீட்பு!

DIN

 பிலிப்பின்ஸ் நாட்டில் நடுக்கடலில் படகு  திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள சிக்விஜோர் மாகாணத்திலிருந்து போஹோல் மாகாணத்திற்கு சென்ற படகில் 120 பயணிகளும், படகுக் குழுவினரும்  பயணம் மேற்கொண்டனர். இந்த பயணத்தின்போது திடீரென நடுக்கடலில் படகில் தீப்பிடித்துள்ளது. இதனையடுத்து, தீயினை அணைக்கும் பணியில் இரண்டு படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 5 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். படகில் தீப்பிடித்த புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் பகிரப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கடலோர காவல் படை தரப்பில் கூறியதாவது: நடுக்கடலில் படகில் தீடிரென இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விபத்தில் மீட்கப்பட்டவர்கள் போஹோல் மாகாணத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது என்றனர்.

முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில் படகில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 250 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT