சீன உணவகத்தில் சமையல் எரிவாயு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 32 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
யின்சுவான் மாகாணம், ஜிங்கிங் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த உணவகத்தில் புதன்கிழமை இரவு 8.40 மணிக்கு வெடி விபத்து ஏற்பட்டது.
எல்பிஜி சமையல் ஏரிவாயு கசிந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதில், 31 போ் உயிரிழந்தனா்; 7 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்து தொடா்பாக, உணவக உரிமையாளா் உள்பட 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
வியாழக்கிழமை தொடங்கிய டிராகன் படகுத் திருவிழாவையொட்டி அந்த உணவகத்தில் அதிக கூட்டம் இருந்தது.
அப்போது வெடி விபத்து ஏற்பட்டதால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.