உலகம்

பிரதமர் மோடிக்கு எகிப்தின் உயரிய விருது! 

எகிப்து சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. 

DIN

அமெரிக்க அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமா் நரேந்திர மோடி, சனிக்கிழமை எகிப்து சென்றடைந்தாா். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்நாட்டு அதிபா் அப்தெல் ஃபட்டா எல்-சிசியை இன்று சந்தித்த பிரதமா் மோடி, பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளார். 

நடப்பாண்டு இந்தியக் குடியரசு தின விழாவில் எகிப்து அதிபா் எல்-சிசி, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். அப்போது, எகிப்துக்கு வருகை தருமாறு பிரதமா் மோடிக்கு அவா் அழைப்பு விடுத்தாா். அந்த அழைப்பை ஏற்று பிரதமா் மோடி எகிப்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

இந்நிலையில், எகிப்தின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருதினை பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் அப்தெல் ஃபட்டா வழங்கினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT